ஆன்லைனில் பட்டாசு விற்பனையில் 6 வருடமாக அசத்தி வரும் – mycrackers.com அபிலாஷ் சங்கர்

தொழில் நுட்ப வளர்ச்சியில் காலங்கள் மாறுப்பட்டாலும் நம் தொன்று தொட்ட பெருமை வாய்ந்த விழா கொண்டாட்டங்கள் நம்மை மகிழ்வுடனே வைத்திருகின்றன. தீபாவளி என்றதும் நினைவிற்க்கும் வரும் சந்தோசம் பட்டாசுடன் இணைந்திருக்கிறது. தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளித்து கடவுளை வணங்கி இனிப்புடன், புத்தாடை உடுத்தி பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து இருக்கும் நம் உள்ளம் அந்த வருடம் முழுவதும் நம்மை செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும் வல்லமை கொண்டது.

ஆன்லைனில் பொருட்கள் சிறப்பான சந்தையை பிடித்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், பட்டாசு என்றவுடன் நினைவுக்கு வருவது mycrackers.com மட்டுமே..!

இந்த பட்டாசு வியாபாரத்தினை கடந்த ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கி தற்போது சிறந்த சேவையை அளித்து ஆன்லைன் பட்டாசு விற்பனையில் வெற்றி கண்ட திரு. அபிலாஷ் சங்கர் அவர்களுடன் சிறப்பு பேட்டி.