பங்குச்சந்தை ஆலோசகர் – திரு.ஸ்ரீதரன் நித்தின்.

பங்குச் சந்தை என்பது நிறுவனங்கள் தங்கள் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். இது பொதுச் சந்தையில் தொழில்களை பொதுவில் வியாபாரப்படுத்தவும், நிறுவனத்தின் உரிமத்துவ பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது. சந்தை வழங்கும் எளிதில் பணமாக்கும் முறை பங்குப்பத்திரங்களை விரைவாக எளிதாகவும் விற்க முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. இது ரியல் எஸ்டேட் போன்று குறைவான பணமாக்கும் வாய்ப்பு கொண்டவற்றோடு ஒப்பிடுகையில், பங்குகளில் முதலீடு செய்வது ஒரு அட்டகாசமான அம்சம்.

பங்குசந்தையில் பணம் பண்ண வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் 1 . பொறுமை, 2 . கற்றல் அறிவு  3 . அதிர்ஷ்ட்டம்.

இதுதான் பங்குசந்தையில் மிக முக்கியமான ஒன்று,  எந்த ஒரு நேரத்திலும்  அவசரப்பட்டு முடிவுகளை  எடுத்து விடக்கூடாது. அதேபோல் ஒரே நாளில் பணம் சம்பாதித்து விடவேண்டும், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக்கி விட வேண்டும் என்று நினைத்து நீங்கள் பங்குசந்தையில் நுழைந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

ஒரு சிலர் பங்குசந்தையில் நுழைந்தவுடனே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் கண்ணா பின்னவென பங்குகளை வாங்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு கை சுட்டபின் தான் தெரியும் நான் செய்தது தவறு என்று.   பங்குசந்தை என்பது முழுக்க முழுக்க நிறுவனத்தின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குவது இல்லை. அதில் பேரு முதலீட்டாளர்களின் விளையாட்டும் அடங்கி உள்ளதால் கண்டிப்பாக அடிப்படை மற்றும் தொழில்நுட்பப பகுப்பாய்வு தெரிந்திருக்க வேண்டும்.

அதை சிறந்த முறையில் பயிற்சி அளித்து ஆலோசனையும் தருகிறார் அதுமட்டுமின்றீ தினமும் பங்குச்சந்தை பற்றிய தகவல்களை http://panguvarthagaulagam.blogspot.in   வலைப்பூ மூலமாக நமது சிறுதொழில்முனைவோர் குழுவில் அளித்து வருகிறார், பங்குச் சந்தை ஆலோசகர் திரு. ஸ்ரீதரன் நித்தன்.

அவரது சிறப்பு பேட்டி இது உங்களுக்காக…